லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் சுனில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த பாலமுருகன் உள்ளிட்ட 4 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனிலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.