Categories
உலக செய்திகள்

கார் மீது விழுந்த விமானம்…. 3 பேர் பலியான சோகம்…. சிசிடிவியில் பதிவான பதைபதைக்கும் காட்சி…!!

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நார்த் பெர்ரி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய பீச்கிராபிட் போனன்சா என்ற சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட  சிறிது நேரத்திலேயே எஞ்சின் கோளாறு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இந்த விமானம் தரையில் விழுந்த வேகத்தில் தீப்பற்றி எரிந்ததால் அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் அவர்கள் யார்? என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் காரில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனையும், பெண்ணையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணிற்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/i/status/1371572526615252994

Categories

Tech |