மேற்கு வங்காள மாநிலம் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் இருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த விவாகரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரின் உதவியாளரான நடிகை அமிர்தா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அமலாக துறையினர் அமிர்தா முகர்ஜி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த நான்கு கார்களை காணவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது கோடிக்கணக்கான பணம் அந்த காரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்களை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.