Categories
தேசிய செய்திகள்

கார் மோதியதில் பல அடி தூரம்… தூக்கி வீசப்பட்டு பறக்கும் ஆட்டோ… பதைபதைக்கும் வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நள்ளிரவு நடந்த பயங்கர சாலை விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விடுதியில் வேலை செய்யும் ஊழியரான உமேஷ் குமார் என்பவர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ சைபராபாத் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ பறந்து சென்று சாலையோரம் விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த உமேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபராபாத் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சுஜித் என்ற இளைஞரையும், அவரது நண்பர் ஆஷிஷ் மற்றும் குற்றத்தை மறைக்க முயன்ற சுஜித்தின் தந்தை ரகுநந்தன் ரெட்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |