Categories
உலக செய்திகள்

கார் மோதி இந்திய வம்சாவளி பெண் மரணம்…! காரை ஏற்றியவர் மீது கருணை காட்டிய கனடா நீதிமன்றம் …!!

கனடா நாட்டை சேர்ந்தவர் இந்திய பெண் மீது கார் மோதிய வழக்கில் இரக்கத்தின் அடிப்படையில் அவரின் தண்டனை குறைந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பிஅக்ரி என்பவருக்கு மூளை புற்று நோய் இருந்துள்ளது. அதனால் அவரை மருத்துவர்கள் கார் ஓட்டக்கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதையும் மீறி கார் ஓட்டியுள்ளார் .இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த அஞ்சனா ஷர்மா மீது காரை மோதி உள்ளார் . விபத்தில் அஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ்க்கு  இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும் ,ஏழரை ஆண்டுகாலம் கார் ஓட்டத்தடையும் விதிக்குமாறு சட்டம் அரசு  தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் நீதிபதி ரிச்சர்ட் நியூபெல்டு அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மீது இரக்கம் கொண்டு 30 மாத தண்டனையை 27 மாதங்களாக குறைத்துள்ளார்.மேலும் நீதிபதி இதுகுறித்து ஜேம்ஸ்ஸிடம்  பேசும்போது இரண்டரை ஆண்டு சிறை தண்டனை என்பது ஒரு ஆயுள் தண்டனை போல் மாறி விடலாம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |