கார் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் top10 வங்கிகளின் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சொந்தமாக கார் இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் அதன் விலையை கருத்தில் கொண்டு அது வாங்குவது மிகவும் கடினம் என்று கடந்துவிடுவோம். லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் கார் வாங்க முடியும் என்பது கிடையாது. கார் வாங்க நிறைய சலுகைகள் உள்ளன. கார் வாங்குவதற்கு தேவையான கடன் உதவிகளை வங்கிகளே வழங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், சரியான வங்கியை தேர்ந்தெடுப்பது.
கார் வாங்க கடன் வாங்க முடிவு செய்து விட்டால் முதலில் பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த வங்கியில் செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு? சிறப்பு சலுகைகள் உள்ளதா? திருப்பி செலுத்தும் கால வரம்பு எவ்வளவு? போன்ற அம்சங்களை விசாரிக்கவேண்டும். அதனை ஒப்பிட்டு பார்த்து எந்த வங்கியில் குறைவாக உள்ளதோ அந்த வங்கியில் நாம் கடன் பெறலாம். தற்போது நிலையில் குறைந்த வட்டியில் கார் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்களை பாங்க்பஜார் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 8.80% முதல் 9.50%
பேங்க் ஆஃப் பரோடா – 8.35% முதல்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 8.60% முதல் 8.70%
ஹெச்டிஎஃப்சி பேங்க் – 8.90% முதல்
ஃபெடரல் பேங்க் – 9.25%
ஆக்சிஸ் பேங்க் – 9.05 முதல் 11.30%
கனரா பேங்க் – 8.75% முதல் 11.30%
ஐடிபிஐ பேங்க் – 9.10% முதல் 9.70%
பஞ்சாப் நேஷனல் பேங்க் – 8.55% முதல் 9.20%
சிண்டிகேட் பேங்க் – 8.85% முதல் 9.10%