மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 வரை தள்ளுபடி சலுகையை வழங்குகிறது.
அதாவது, வாடிக்கையாளர்களுக்கு அதன் மேனுவல் வேரியண்டில் ரூபாய். 50,000 வரையிலான மிகப் பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இவற்றில் ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் நன்மைகள் போன்றவை அடங்கும். ஏஎம்டி மாறுபாட்டிற்கு ரூபாய்.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
இதனிடையில் ஆல்டோ கே10 ஏஎம்டி வகைகளில் ரொக்க தள்ளுபடியானது வழங்கப்படவில்லை. இது தவிர்த்து மாருதி ஆல்டோ 800 காரிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய்.34,000 மதிப்புள்ள நன்மைகள் இவற்றில் வழங்கப்படுகிறது. இதில் ரூபாய்.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி போன்றவை கொடுக்கப்படுகிறது.