மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது.
நம்மில் பலருக்கு சொந்த வீடு கார் உள்ளிட்டவற்றுடன் கூடிய ஒரு ராயல் ஆன வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும் ஆசைப்படுவது என்பது மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாக இருக்கக்கூடியது. சொந்த வீடு இல்லாவிட்டாலும் கார் இருந்தால் நாம் ஒரு ராயலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று பலருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிலும் கார்களை வாங்கி விட்டு அதற்கு இஎம்ஐ கட்ட முடியாமல், வாங்கிய பின் அந்த காரை மெயின்டெய்ன் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே இந்தியாவில் தங்களது கார்களை அதிகமான மக்கள் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் அது அவர்களால் பணம் கொடுத்து உபயோகப் படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை இந்திய மக்களுக்காக வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால், மாருதி சுஸுகி நிறுவனம் தங்களது கார்களை வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விடுவதற்காக முடிவு செய்து உள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த பட்ஜெட்டில் வாடிக்கையாளர்கள் கார்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை முதற்கட்டமாக குக்கிராமங்களிலும் பெங்களூர் நகரத்திலும் நடைமுறைப்படுத்த உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் இந்த திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.