Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு…. பிரதமர் மோடி நிதி உதவி அறிவிப்பு….!!!!

காஷ்மீர்கிஷ்த்வார் மாவட்டத்தில் சிங்காம் எனும் இடத்திலிருந்து சாட்ரூ என்ற கிராமத்துக்கு நேற்று சில பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து போண்டா என்ற கிராமத்துக்கு அருகில் மலைச் சாலையில் அந்த கார் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். அத்துடன் படுகாயமடைந்த மேலும் 3 பேர் கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பதிவில் “கிஷ்த்வாரில் நடைபெற்ற விபத்து வருத்தம் அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் இருக்கிறது. இதற்கிடையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய். 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய்.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |