Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய துணை முதல்-மந்திரியின் மகன்…. பெரும் பரபரப்பு…!!!!!

உத்திர பிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவின் மகன் யோகேஷ் குமார் மவுரியா உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஆலம்பூர் புறவழிச்சாலையின் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. யோகேஷின் கார் டிராக்டர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது .

இதனையடுத்து உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், கல்பி அருகே விபத்து நடந்ததாகவும், விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கார் மட்டும் சிறிது சேதம் அடைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் விபத்து நடந்த போது காரில் யோகேஷ் இருந்ததையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |