கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார். ஆக.,5-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அன்னே ஹெச் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories