பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க்(32) கார் விபத்தில் உயிரிழந்தார். சிகாகோவில் பைக்கில் சென்ற இவர் சிக்னலில் இருந்து புறப்பட்ட போது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து எதிரே வந்த காரை ஓட்டி வந்த 20 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் School Of Rock உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.