Categories
சினிமா தமிழ் சினிமா

கார் விபத்துக்கு பின்…. நடிகை ரம்பா குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வாயிலாக தமிழில் சினிமாவிற்கு அறிமுகமாகி 90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஆவார். சென்ற 2000ம் வருடங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம்செய்து கொண்ட ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இதனிடையில் அடிக்கடி ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன்கூடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் தானும் தன் குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர்தப்பியதாக அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் தன் குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுகொண்டார். இந்த நிலையில் விபத்துக்கு பின் தன் குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை நடிகை ரம்பா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |