சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி நடுவீதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சாலையில் எதிர் புறம் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த இளவரசனின் மோட்டார் சைக்கிளில் மீது மோதி விட்டு இளவரசனின் வீட்டு சுவரிலும் மோதி நின்றது.
இதனால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளவரசன் கார் டிரைவரை விசாரணை செய்த போது கொக்காங்காட்டை பகுதியை சேர்ந்த முத்து சாமி என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.