வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் என்று மூடப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.