டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் காற்று மாசுபாடு மோசமான பிரிவிலிருந்து இன்னும் மாறுபடவில்லை. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதனையடுத்து நகரின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது, இன்று காலை 10:30 மணி நிலவரப்படி தலைநகர் டெல்லியின் ஒட்டு மொத்த காற்று தர குறியீடு 262 ஆக இருப்பதாக கூறியுள்ளது.