காட்டு பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் உடனடியாக அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வீரலப்பட்டி பிரிவு அருகே மலைப்பகுதி உள்ளது. இந்த மலையில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது பாறைப் பகுதி அதிகமாக இருந்த இடத்தில் தீ பிடித்ததால் உடனடியாக தீயை அணைக்க முடிந்தது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மர்ம நபர்கள் வனப்பகுதிக்கு தீ வைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.