பலத்த காற்றில் பறந்து வந்த இரும்பு தகடு தலையில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொம்மம்பட்டு கிராமத்தில் ஊர்க்காவல் படை வீரரான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(42) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பச்சையம்மாள் வீட்டிற்கு வெளியே காய வைத்திருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த இரும்பு தகடு காற்றில் பறந்து வந்து பச்சையம்மனின் தலை மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.