இந்தியா முழுவதிலும் காற்று மாசுபடுதலை 20% முதல் 30% வரை குறைப்பதற்காக தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தரம் மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை,மதுரை,திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் அடங்கியுள்ளது.
அதில் சென்னைக்கு மட்டும் 181 கோடியை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி,சென்னை ஐ.ஐ.டியுடன் இணைந்து காற்று மாசுபாடு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராச்சி,தமிழ்நாடு மாசு காட்டுபாடு வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே கடந்த மே மாதம் 6 தேதி கையெழுத்து ஆகியது.
இந்த திட்டத்தினை மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆலோசனையுடன் சென்னை ஐ.ஐ.டி. செயல்படுத்த உள்ளது.அது மட்டுமல்லாமல் காற்று தர கண்காணிப்பு,தர பகுப்பாய்வு,தர பயன்பாடு,தொகுத்தல் அறிக்கை ஆகியவற்றை தயாரித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை ஐஐடி அனுப்ப முடிவு செய்துள்ளது. சென்னையில் நடத்தப்படும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் சுற்றுப்புற காற்று மாசுபாட்டிற்கான மூல பங்களிப்பு மதிப்பீடு மற்றும் மாசுக்கான மூலங்களை கண்டறிதல் ஆகியவையாகும்.