Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு… மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 % அதிகரிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காற்று மாசுபாட்டால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி என்சிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக இருக்கிறது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று கூறியுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட நொய்டா நகரில் காற்று தரக் குறியீடு 529 ஆக பதிவாகி இருக்கிறது. அதேபோல் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து  காற்று தரக் குறியீடு கடுமையாக மோசமடைந்திருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்து இருக்கின்ற சூழலில் லேடி ஹார்லிங்கை மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை போன்றவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து காற்று மாசுபாட்டால் நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகளிடையே அதிகரித்திருப்பதனால் அந்த அறிகுறிகளுடன் சேரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து காணப்படுகின்றது.

காற்று மாசுபாட்டால் சுவாச பாதிப்புகளான இருமல் மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் அதிக சிரமம் போன்றவை காணப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரஞ்சித் கொலேரியா பேசும்போது புகையிலை உபயோகிப்பதில் ஏற்படும் பாதிப்புகளை விட காற்று மாசு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 2017 ஆம் வருடம் வெளியான செய்தி நிறுவன தகவலின் படி ஒவ்வொரு வருடமும் நாட்டில் 12.4 லட்சம் பேர் காசு மாட்டு பாட்டால் உயிரிழந்து வருகின்றனர் என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |