பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதத்தில், அசாம் அரசு 200 மின்சார பேருந்துகள் மற்றும் 100 இயற்கை எரிவாயு பேருந்துகளை பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்னெடுப்புகளை எடுக்கின்றனர். இது எங்கள் பங்கு. விரைவில் தனியார் பேருந்துகளுக்கும் இதை நடைமுறைப்படுத்துவதுவோம் என்று தெரிவித்துள்ளார்.