டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின்தரக் குறியீடு அளவு 406 என இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, காற்றுமாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான டீசலில் இயங்கும் லாரிகள் அனுமதிக்கப்படாது. *அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் லாரிகள் மட்டும் அனுமதிக்கப்படும். *தொடக்கப்பள்ளிகள் இயங்காது. *தனியார், அரசு பணியாளர்கள் 50% பேருக்கு WFM. *அனைத்து வித கட்டுமானங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு தடை *அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் இயங்குவதற்கு நேர கட்டுப்பாடுகள். *தொழில்துறை மாசுபாடுகளை கண்காணிக்க 33 சிறப்பு குழுக்கள் அமைப்பு.