Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இனி வீட்டிலிருந்தே வேலை….? ஊழியர்களுக்கு முக்கிய வேண்டுகோள்….!!!

டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடை குறைக்க, மாநில அரசின் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின்தரக் குறியீடு அளவு 406 என இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, காற்றுமாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய், வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரையிலும் வீட்டிலிருந்து பணியாற்றுங்கள் என தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |