2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ். “வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை. இறுதி காலக்கெடுவுக்கு முன்பு பெரும்பாலானவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இறுதி நாளில் கணக்கு தாக்கல் எண்ணிக்கை 1 கோடியை எட்டும்” என்று தெரிவித்துள்ளார்.