Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலதாமதமாக கட்டணம் வசூலித்த வங்கி”…. “கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு”…. திருப்தியில் நுகர்வோர்….!!!!!!

காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 50,000 இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகின்றார் இவர் கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்திருக்கின்றார். சென்ற 2006 ஆம் வருடம் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகைக்காக குறிப்பிட்ட நாளுக்குள் காசோலை கொடுத்து இருக்கின்றார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்த போதிலும் பணம் இருப்பு இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கூறி வாங்கி நிர்வாகம் காலதாமத கட்டணமாக ரூபாய் 300 வசூலித்து இருக்கின்றது.

இது குறித்து முறையான ஆவணங்களுடன் வங்கி நிர்வாகத்திடம் அசோக்குமார் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அசோக் குமார் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் மனுதாரரின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்த போதிலும் காசோலையை திருப்பி அனுப்பி காலதாமதமாக கட்டணத்தை வாங்கி நிர்வாகம் வசூலித்தது சேவை குறைபாடு. ஆகையால் இதற்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு 50,000 இழப்பீடு தொகையும் வழக்கு செலவுக்காக 3000 வழங்க வேண்டும். மேலும் காலதாமத கட்டணம் எனக் கூறி வசூலித்த 300 ரூபாயும் திரும்ப வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு இருக்கின்றது.

Categories

Tech |