வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் செலவினங்களை நடப்பு ஆண்டுக்குள் வழங்க வேண்டும் எனவும், காலதாமதமின்றி அனைத்து அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் பதவி உயர்வுக்கான காலத்தை 4 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் எனவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கு பதவி உயர்வு நிபந்தனை அடிப்படையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் துணைத்தலைவர் சுதர்சன், பொருளாளர் மணிகண்டன், செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.