காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாநாட்டில் உறுதியான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் விரைந்து செயல்பட வேண்டும்.
தொழில்புரட்சி காலத்திற்கு முன்பு 14 டிகிரி செல்சியஸாக இருந்த புவி மேற்பரப்பு தற்போது ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிலையில் அதை 2 டிகிரி செல்சியஸ் அதாவது 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்கவும். இது அதிகரிக்க கூடும் என்ற நிலையில் இதை 1.5 டிகிரி தேசிய செல்சியசுக்கு அதாவது 15.5 டிகிரி செல்சியஸ் என்று கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்று கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டது.
இந்த இலக்கை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. புவி வெப்பநிலை உயர்வை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுகோலுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பாரிஸ் உடன்படிக்கையின் மையக்கருத்து. ஆனால் அது சாத்தியம் இல்லாத பட்சத்தில் இரண்டு டிகிரிக்குளாவது கட்டுப்படுத்த வேண்டும். தற்போது உலக நாடுகள் உறுதியளித்துள்ள சட்டங்களின்படி இந்த ஆண்டு நூற்றாண்டு இறுதிக்குள் 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். இது பூவுலகை காப்பாற்றுவதற்கு எந்த வகையிலும் உதவாது.
காலநிலை மாற்றத்துக்கு காரணமான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. கால நிலை மாற்றத்தால் மிக மோசமடைந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கின்றது. உலக மக்கள் தொகையில் 17. 5 சதவீத அளவை கொண்டுள்ள இந்தியாவின் வளிமண்டல மாசுபாடு பங்களிப்பு வெறும் 4% மட்டுமே. உலகின் சராசரி தனிநபர் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியர்களின் பங்கு உள்ளது. இந்தியா போன்ற நாடுகள் புவிவெப்பமயமாதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவதுதான் நியாயமான செயலாக இருக்கும்” என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.