Categories
உலக செய்திகள்

காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள்” நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த பிரபல நாடு…!!!

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா, 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்தது. அதனை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியில் இருந்து நைஜீரியா விடுதலை அடைந்தது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் இருந்து பல விலை மதிப்பற்ற பொருட்கள் ஆட்சியர்களால் கவர்ந்து செல்லப்பட்டது. அதன்படி தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள பெனின் என்ற நகரத்தின் மீது கடந்த 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர்கள் படையெடுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்து பல அரியவகை கலைப்பொருட்கள், சிலைகள் போன்றவற்றை இங்கிலாந்து வீரர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த பொருட்கள் 13ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

அவ்வாறு கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜெர்மனி வசம் இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த கலைப் பொருட்களை திருப்பி ஒப்படைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி ஐரோப்பிய காலணி ஆட்சியாளர்களால் நைஜீரியாவில் இருந்து 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கவர்ந்து வரப்பட்ட 1,500 வெண்கல சிலைகளை ஜெர்மனி திரும்ப ஒப்படைத்தது. இந்நிகழ்ச்சி ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வெளியுறுத்துறை மந்திரி அனாலேனா பேர்பாக், நைஜீரிய கலாச்சார மந்திரி லாய் முகமதுவிடம் இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |