Categories
சினிமா தமிழ் சினிமா

காலமான மாமனார்…. “அவரை நா ரொம்ப மிஸ் பன்றேன்”…. உருக்கமாக பதிவிட்ட பிரபல நடிகர்….!!!

ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மாமனாரான நடிகர் ராஜேஷை மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். 

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் என்பவர் கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களில் நடித்தவர். இவர்தான் நடிகர் அர்ஜூனின் மாமனார். அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த வாரம் மரணம் அடைந்துள்ளார்.

தற்போது ஆக்சன் கிங் அர்ஜூனின் மாமனார் ராஜேஷ் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் என் மாமனாரை மட்டும் நான்  மிஸ் செய்யவில்லை.ஒரு சிறப்பான நடிகர். சிறந்த மனிதன் என் அப்பாவின் நெருக்கமான நண்பரையும் மிஸ் செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |