மோகன் ஜி பதிவிற்கு செல்வராகவன் பதில் கூறியுள்ளார்.
மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் மோகன்ராஜ் பதிவொன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள். மீண்டும் செல்வா சார் உடன் இணைந்து பணிபுரிய ஆசை…. இனிமையான எளிமையான மாமனிதர் இவர்… நன்றி செல்வராகவன் சார் என புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்! காலம் போனதே தெரியவில்லை! பேரன்புக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி 😍 https://t.co/WeWn3brcXb
— selvaraghavan (@selvaraghavan) October 11, 2022