தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததை அடுத்து 9, 10, 11, 12 மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் ஒரு சில பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன..
இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. அவர்கள் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கொரோனா முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் கல்லூரிக்கு காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.