Categories
மாநில செய்திகள்

காலவரையற்ற வேலைநிறுத்தம்…. விஸ்வரூபம் எடுக்கும் மீனவர்கள் பிரச்சினை…!!!!

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் கையில் எடுத்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 43 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் காங்கேசன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி நாவஸ் கனி பேசினார்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மீனவர்களை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |