கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இத்தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஏழு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி சாலை,கோவை ரயில் நிலையம், பஸ் நிலையங்கள், அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, மசக்காளிபாளையம், பொள்ளாச்சி சாலை, விளாங்குறிச்சி சாலை, ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பீளமேடு, கணபதி,பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர், துடியலூர், சரவணம்பட்டி, அன்னூர், சூலூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள பல்பொருள் அங்காடி, வணிக வளாகங்கள், மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள்,மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 69 கடைகளிலிருந்து 423 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதற்கு வைத்திருந்த 41 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 உட்பிரிவு 55, 63-ன் படி நோட்டீஸ் விடப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 15 கடைகளுக்கு ரூ 30,000 அபதாரம் விதிக்கப்பட்டன.