Categories
மாநில செய்திகள்

“காலாவதியான மருந்து பொருட்கள்”…. கரிப்பிணிகளின் உயிரோடு விளையாடும் அரசு…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித்தொகையாக 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பாக சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது. அவற்றில் ஊட்டச்சத்து மாவு ஒரு கிலோ, இரும்புச் சத்து திரவம் 200 மி.லி- 3, உலர் பேரிச்சை ஒரு கிலோ, புரதச்சத்து பிஸ்கேட் 500 கிராம், ஆவின் நெய் 500 கிராம், அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை- 3 மற்றும் துண்டு ஒன்று வழங்கப்படுகிறது. இதனுடைய மதிப்பீடு 2,000 ரூபாய் என அரசு கணக்கிட்டுள்ளது.

இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் பதினைந்து வேலம்பாளையம் பகுதியிலுள்ள சுகாதார மையத்தில் நேற்றைக்கு முந்தைய தினம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட அந்த பெட்டகத்தில் பேரிச்சை காலாவதியாகி ஒரு மாதமாகிறது. அதேபோன்று ஆவின் நெய் இன்னும் ஒரு நாளில் காலவதியாக உள்ளது. இதனை விபரம் தெரியாத கர்ப்பிணிகள் சாப்பிட்டால் ஆபத்து ஏற்படும் என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். ஆகவே அலட்சியமாக இருக்காமல் இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனத்தின் மூலமாக வேறு எங்கெங்கு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விசாரித்து தடுத்து நிறுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது

Categories

Tech |