Categories
அரசியல் தேசிய செய்திகள்

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்…. கோவா முன்னாள் முதல்வர் ராஜினாமா…!!!

கோவா மாநில முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ ஃபலேரோ தனது சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதனை குறித்து அவர் பேசியதாவது, “மம்தா பானர்ஜியால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது அதிகாரத்திற்கும் சவால் விட முடியும். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 200 கூட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியும், 250 கூட்டங்களை அமித்ஷாவும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மம்தாவிற்கு அமலாக்கத்துறை, சிபிஐ கெடு பிடியும் இருந்த நிலையில் மம்தாவே வெற்றி பெற்றுள்ளார். மம்தா பேனர்ஜியால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியை எங்கிருந்தும் எதிர்க்க இயலும்” என்று புகழ்ந்துள்ளார்.

லூய்சின்ஹோ ஃபலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு, வேறொரு கட்சியிரான  மம்தாவை புகழ்ந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் தனது எம்.எல்.ஏ  பதவி உள்பட கட்சியின் அடிப்படை பதவியிலிருந்தும் விலகியுள்ளார். மேலும் இவர் கூடிய விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Categories

Tech |