இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் கீழாக குறைந்துள்ளதாக டிராய் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.28 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஜியோ, வோடபோன், ஐடியா நிறுவனங்களில் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. என்றாலும் ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டும் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 41.57 கோடியாக குறைந்துள்ளது. வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 16.14 லட்சமாக குறைந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டும் 4.75 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் எனவும், தற்போதுள்ள ஏர்டெல் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 35.57 கோடியாக உயர்ந்துளது என ட்ராய் கூறியுள்ளது.