கரூர் அதிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எம்பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கரூரில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி இரவு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அங்கு முதல்வர் வர காலதாமதம் ஆனதால் அங்கிருந்த பொதுமக்கள் கலையத் தொடங்கினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டதால் நாற்காலிகளை காலியாக இருந்தன. இதை பார்த்த செய்தியாளர்கள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதனால் அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர், மேலும் அவர்களை அடித்து கைபேசியை பறித்துள்ளனர்.இந்த சம்பவத்தால் செய்தியாளர்கள் அங்கிருந்து புறக்கணித்து வெளியே சென்று விட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த எம்பி ஜோதி மணி பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.