Categories
விளையாட்டு

காலிறுதியில் வெற்றி பெற்ற பிவி சிந்து… வெற்றி தருணம்… வைரலாகும் வீடியோ…!!!

காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற விருவிருப்பான ஆட்டத்தில் 22-20 என்ற நேர் செட்களில் பிவி சிந்து ஆட்டத்தை வென்றார். முதல் சுற்றில் ஈஸியாக வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாம் செட்டில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிந்து வெற்றி பெற்றார். இதையடுத்து சிந்து பதக்கம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.பி.வி.சிந்து இப்படி காலிறுதியில் வென்று அரையிறுதிக்குள் முன்னேறியபோது, அவர் செய்த ஆக்ரோஷ கர்ஜனையும், வெற்றிக் களிப்பில் செய்த விஷயங்களும் இணைய வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அனைவரும் இவர் தங்க பதக்கம் வெல்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |