தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகில் தோட்டன்விலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரவிக்கு நீண்ட நாட்களாக காலில் புண் இருந்துள்ளது. இந்த காலில் இருந்த புண்ணிற்கு பல்வேறு சிகிச்சைகள் அவர் செய்து வந்துள்ளார்.
ஆனால் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து ரவியின் மகன் சதீஷ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.