Categories
பல்சுவை

காலில் ஏன் தங்க கொலுசு, மெட்டி போன்ற…. ஆபரணங்கள் அணியக்கூடாது தெரியுமா…? இதுதான் காரணம்…!!!

பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டுவார்கள். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர்.

அதேபோல் காதில் தங்கம் அணியும் போது காது நரம்புகள் வலிமையடையும். மோதிர விரலில் தங்கத்தை அணியும் போது அது, கருப்பையை வலுப்படுத்தும், சிசு வளர்ச்சியை தூண்டும். அதேபோல் காலில் தங்கத்தை அணியும் போது அது வாத நரம்புகளை தூண்டிவிடும். அதனால் தான் தங்கத்தை காலில் அணியக் கூடாது என்பார்கள். அதேசமயம் வெள்ளியை காலில் அணியும் போது அது வாத நரம்புகளை கட்டுப்படுத்தும். அதனால் தான் கொலுசு மற்றும் மெட்டிகளை வெள்ளியில் அணிந்துவந்தனர்.

Categories

Tech |