வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிங் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலில் அடிபட்ட நிலையில் ஒரு யானைகுட்டி சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் ஏற்பட்ட யானைகுட்டியை பார்த்துள்ளனர்.
அதன்பின் காலில் இருந்த காயங்களுக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து யானைகுட்டியை கோழிகுத்தி முகாமிற்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த முகாமில் வைத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் யானைகுட்டிக்கு தேவையான உணவுகள் மற்றும் மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது.