Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி… காங்கிரஸ் துணைத்தலைவர் நூதன போராட்டம்… பரபரப்பு…!!!

காங்கிரஸ் துணைத் தலைவர் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  காங்கிரஸ் துணை தலைவராக இருப்பவர்  அய்யலுசாமி. இவர் நேற்று முன்தினம் கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம்  காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. அவர் பக்கத்தில் புகைப்படத்துடன் பேனர்களை வைத்து கொண்டு ராஜீவ் காந்தி மற்றும்  வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் இருந்தார்கள்.

மேலும் காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தார்கள். இதுகுறித்து அய்யலுசாமி கூறியதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் வழக்கில் உள்ள குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினரின் இந்த நூதன போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |