இஸ்தான்புல்லுக்கு டப்ளினிலிருந்து சென்ற விமானம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் காலில் விமான ஊழியர் எதிர்பாராதவிதமாக தேநீரை சிந்தியதால் பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
துருக்கி விமான சேவை நிறுவனம், அயர்லாந்து நாட்டை சேர்ந்த தற்போது 17 வயதுடைய இளைஞருக்கு 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்நிலையில் சம்பவத்தின்போது விமான ஊழியர் ஒருவரின் தவறால் அந்த சிறுவனின் கையில் இருந்த சூடான தேநீர் கிண்ணம் எதிர்பாராதவிதமாக சிறுவனுடைய தொடையின் மீது சிந்தியுள்ளது. இதனால் சிறுவனுக்கு நிரந்தரமான வடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது தாயாரின் உதவியுடன் 13 வயதான சிறுவன் karakaya நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் karakaya-ன் தாயார் மருத்துவர்களை சந்தித்து தனது மகனின் நிலை குறித்து ஆலோசித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் உரிய சிகிச்சை மேற்கொண்டால் மூன்று வார காலத்தில் காயம் ஆறி விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அந்த வடு காலத்திற்கும் மாறாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த சிறுவனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடுத்த முடிவில் துருக்கிய விமான சேவை நிறுவனம் சிறுவனுக்கு ஏற்பட்ட வடுக்கு இழப்பீடாக 56 ஆயிரம் பவுண்டுகளை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.