இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் படை தலைவன் ஹர்மீத் சிங் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலை படையின் தலைவர் ஹர்மித் சிங் பாகிஸ்தானில் சுட்டு கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார். 2018 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் மத வழிபாட்டின்போது குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். சர்வதேச இன்டர்போல் கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
முனைவர் பட்டம் பெற்றவரான ஹர்மித் சிங் ஹேப்பி பி .ஏச் .டி என்று அழைக்கப்பட்டு வந்தார். காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் ஹர்மிதர்மீண்டு இறந்ததை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு அந்த இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வந்த இவர் லாகூரில் உள்ள தேரா குருத்வாராவில் நடந்த உள்ளூர் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார்.