Categories
அரசியல்

காலி சேர்கள் vs மோடிஜி…. நடந்துருந்தா நல்லா இருந்திருக்கும்…. மரண கலாய் கலாய்த்து வருத்தப்பட்ட அகிலேஷ்….!!!

மோடி பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பியது குறித்து அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார்.

பஞ்சோப் மாநிலம் பெரோஸ்பூரில் நடக்கவிருந்த புதிய திட்டங்களுக்கு நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு போராட்டக்காரர்களால் பயணத் தடை மற்றும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் பயணத்தை ரத்து விட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். கடந்த மூன்று நாட்களாக இந்த விவகாரம் தான் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பிரதமரின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ”பிரதமர் மோடியின் பயணத்தை விவசாயிகள் ஏன் தடுத்தனர்? அவரை நிகழ்ச்சிக்கு போக அனுமதித்திருக்க வேண்டும். அங்கிருந்த காலி சேர்களை பார்த்து அவற்றுக்கு மத்தியில் உரையாற்றியிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி மூன்று வேளாண் சட்டங்களை எதற்காக அமல்படுத்தினார்கள்? ஏன் திரும்பப் பெற்றுக் கொண்டனர்? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என்று ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தை பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கேட்காமல் விட்டு விட்டோமே. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது” என்று கிண்டலாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

”தனக்கும் இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டிருப்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். என்று தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவிற்கு போட்டியாக அகிலேஷ் யாதவிற்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிஸியாக செயல்பட்டு வருகிறது. இதனால் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Categories

Tech |