நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களுக்கு சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை வனப்பகுதியில் வீசுகின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல் அதிகம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் “ஈசி 10- என்ற ஸ்டிக்கர் எழுதி ஒட்டப்பட்டு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கையானது நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மது பிரியர்கள் இந்த ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்பக் கொடுத்து பத்து ரூபாயை மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.