ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு மழை, வான்வழி, தரைவழி, கடல்வழி உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே 4-வது நாளாக தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச பணப்பரிவர்த்தனையான SWIFT வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் SWIFT வங்கி முறையிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் ரஷ்யாவை நீக்கியுள்ளன. SWIFT வங்கி முறையில் இருந்து ரஷ்யா நீக்கப்படுவதால் இனி சர்வதேச அளவில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவிக்க நேரிடும்.