Categories
லைப் ஸ்டைல்

காலையில் எழுந்ததும்…. 1 டம்ளர் தண்ணீர் குடிங்க போதும்…. இத்தனை நோய்களையும் விரட்டலாம்…!!!

தண்ணீர் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் நம்முடைய உடலுக்கும் அதிகளவில் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது. அதுவும் இது வெயில் காலம் எனவே அதிகமான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்பத்து பார்க்கலாம்.

செரிமானத்தை தூண்டுகிறது:

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 25 சதவீதம் வளர்ச்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் உணவை செரிக்க வைத்து விரைவில் செரிமானத்தை தூண்டுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்துக்கு நன்மை கிடைக்க வேண்டுமானால் அதற்கு நீர்ச்சத்து மிகவும் தேவை. நோய் தொற்றுகளை எதிர்த்து போராட நீர்ச்சத்து உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும்.

உடல் அழுக்கை வெளியேற்றும்:

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் அழுக்கை எளிதாக வெளியேற்ற முடியும்.

உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது:

உடலில் உள்ள நச்சு சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. தினசரி காலையில் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற செய்கிறது.

ஒற்றைத் தலைவலியை தடுக்கிறது:

ஒற்றை தலைவலி வருவது உடலில் தண்ணீர் இல்லாதது காரணம் தான். எனவே தினசரி தண்ணீர் எடுத்துக் கொள்ளும் போது இந்த பிரச்சனை இருக்காது .

எடை இழப்புக்கு உதவுகிறது:

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கலோரிகளை வேகமாக எரிக்க செய்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

சருமத்தை ஜொலிக்க வைக்கிறது:

அழகான சருமத்தை பெறுவதற்கு காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் கருமையான திட்டுக்கள் உண்டாகிறது. சருமத்தில் அதிக அளவில் நச்சுக்கள் இருப்பதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகிறது. எனவே தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்சினை சரியாகிறது.

எனவே காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு 45 நிமிடங்கள் வரை எதையும் சாப்பிடக்கூடாது. நீர் ஆகாரங்களையும் குடிக்கக்கூடாது. இதனால் பல நோய்களை தடுக்க முடியும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் உடலில் புதிய புத்துணர்ச்சியும், ஆற்றலையும் பார்க்கலாம். அதோடு நீரிழிவு, ரத்த அழுத்தம், இரப்பை அழற்சி, மலச்சிக்கல், நீரழிவு நோயை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. எனவே காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள்.

Categories

Tech |