கனடாவில் தினமும் மின்னஞ்சலை ஓபன் செய்து பார்த்த இளம்பெண்ணுக்கு லாட்டரி மூலம் பரிசு தொகை கிடைத்துள்ளது.
கனடாவைச் சேர்ந்தவர் சமந்தா லோவ். இவர் எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் அவருடைய கைபேசியில் மின்னஞ்சலை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி ஒருநாள் அவர் தூங்கி எழுந்ததும் மின்னஞ்சலை ஓப்பன் செய்து பார்த்துக் கொண்டிருந்தபோது அவருடைய கைபேசிக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில் அவருக்கு லாட்டரி மூலம் ரூ.4 1/2 கோடி பணம் பரிசு தொகை கிடைத்துள்ளதாக தகவல் இருந்துள்ளது. இதனை கண்டு நம்பமுடியாமல் அந்தப்பெண் சந்தோஷத்தில் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.