Categories
ஆன்மிகம்

காலையில் வீட்டு வாசலில்…. கோலம் போடுவது எதற்கு தெரியுமா…? ஆன்மீகம் கூறும் தகவல் இதோ…!!!

பெண்கள் தினமும் வீட்டிற்கு முன்பு சூரியன் உதிப்பதற்கு முன்பாக நீர் அல்லது சாணம் தெளித்து பின்னர் கோலம் போடுவார்கள். அவ்வாறு கோலம் போடுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

பொதுவாக தமிழர்களாகிய நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கிடைக்கும் சூரிய உதயத்திற்கு முன் இருக்கக்கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராணவாயு அதாவது ஆக்சிஜன் நமக்கு கிடைக்கிறது.

குணிந்து கோலமிடுதல், பெருக்குதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக இருக்கிறது. தலையை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் கொடுக்கிறது.

பசு சாணத்தாலோ அல்லது தண்ணீராலோ வீடு வாசலில் தெளிக்கும்போது வாசலில் உள்ள கிருமிகள் நீங்கி விடும்.

நம்முடைய இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருகிறார்கள் என்பாத்து ஐதீகம். இதனை அறிய மிகுந்த வரவேற்பு அளிக்கம் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்களை வாழ்க்கை முறையில் இருக்கிறது.

அதிலும் மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம் தர்மம் செய்வது மாதிரியாக இருக்கிறது.

அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல் உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது. 8

Categories

Tech |